Saturday, October 13, 2012

கருவளையம் மறைய..

   
வளையம் நீங்கும். வெள்ளரிச்சாற்றிற்கு பதிலாக வெள்ளரிகையை நறுக்கி கண்களின்மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

Ø பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களைச்சுற்றித் தடவி வர கருவளையம் மறையும்.

Ø தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதைத்தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

Ø வெள்ளரிச்சாற்றுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நாளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Ø பால் பவுடரை தண்ணீரில் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களைச் சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய்சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும்வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

Ø ஜாதிக்கையை அரைத்து கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்துவிடும்.

Ø போதியளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.


அழகிற்கு அழகு சேர்க்கும் மருதாணி...



பெண்களின் அழகை ஜோலிக்கவைப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்குண்டு. அதனாலோ என்னவோ மருதாணி (மெகந்தி) வைத்துக் கொள்ள எல்லா பெண்களும் ஆசைப்படுகின்றனர். மருதாணி இலைகளை அரைத்து பூசுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படும்.

இது தவிர மருதாணி சிறந்த மருத்துவக்குணம் கொண்டதாகும். கை, கால்களில் இதனை பூசிக் கொள்வதின் மூலம் உடல் வெப்பம் தணிகிறது. அத்தோடு கை, கால்கள் புத்துணர்வுடன் காணப்படுவதை நாமே உணரக்கூடியதாக இருக்கும்.

மருதாணி போடும்போது பொறுமை மிக அவசியமானது. கை தவறினால் அழகு கெட்டு விடும். கைகளுக்கு மருதாணி இட்டு குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது மருதாணிக்கலவை கைகளில்  இருக்க வேண்டும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். கையில் மருதாணி அலங்காரங்களை போட விரும்புவோர் மருதாணி இலைகள் கிடைக்காவிட்டால் கடைகளில் தரமான மருதாணிப்பவுடரை வாங்கி கலவை செய்து பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அலங்காரங்கள் வரும்.

 மேலும் மருதாணி போடும் முன்னர் கை, கால்களுக்கு எதாவது ஒரு கிறீம் அல்லது எண்ணையை கொண்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன்மூலம் எமது கை, கால்கள் புது அழகு பெறுவதுடன் மருதாணி போட்டுக்கொண்ட திருப்தியும் ஏற்படும். 

பருக்கள் நீங்க...


அழகான முகத்தின் அழகையும், கவர்ச்சியையும் கெடுப்பது பருக்களும், வடுக்களும் தான். கருந்திட்டுகள் இருந்தாலே கவலை சூழ்ந்துகொள்ளும்.
இதனுடன் பரு, வடுக்கள் வேறு இருந்தால் பெண்கள் மன சோர்வுக்கு ஆளாகிவிடுவார்கள். பருக்களையும், வடுக்களையும் போக்குவதற்காக கடைகளில் விற்பனை செய்யப்படும் இரசாயனம் கலந்த கிரீம்களை வாங்கி உபயோகிக்கும் பெண்கள் பலர் உள்ளனர்.
இது சில மாதங்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. ஆனால் நம்வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு பருக்களையும், பரு வடுக்களையும் நிரந்தரமாக நிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
விற்றமின் சி சத்து நிறைந்த பழங்கள் முகத்தில் உள்ள பருவின் வடுக்களை போக்கும். எலுமிச்சை மிகச்சிறந்த நிவாரணி.

Ø பாலை கெட்டியாக காய்ச்சி அதில் எலுமிச்சை சாறு விட்டு பின்பு அதை குளிர வைக்கவும். பின்னர் தனியாக ஒரு துணியில் வடிகட்டி கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்தக்கலவையை இரவு தூங்கச்செல்வதற்கு முன்பு முகத்தில் தடவி அடுத்தநாள் காலையில் முகம் கழுவினால் பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறி பொலிவு பெறும்.

Ø எலுமிச்சையை துண்டுகளாக வெட்டி அதனை தழும்புகளின் மேல் பூசலாம். வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் செய்து வர தழும்புகள் மறையும்.

Ø தக்காளி மற்றும் வெள்ளரிக்கய்யை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொண்டு பருக்களின் தழும்புகளின் மேல் தடவுங்கள். 

Ø மல்லி மற்றும் லோத்ரா பட்டை ஆகிய இரண்டையும் இரவில் ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவி வைக்கவும். மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். வாரத்துக்கு இரண்டு முறை இவ்வாறு செய்தால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.

Ø துளசி இலையை எடுத்து, நன்கு காயவைத்து பொடி செய்து, அதில் மஞ்சள்தூள் கலந்து குளிப்பதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு உலர்ந்த பிறகு குளித்தால் சில நாட்களிலேயே பருக்களும், வடுக்களும் காணாமல் போய்விடும்.

Ø வெந்தயக்கீரையை அரைத்து அதை முகத்தில் போட முகப்பருக்கள் மாறி முகம் மென்மையாக மாறும்.

Ø சின்ன ஐஸ் க்யூப்பை எடுத்து அதனை பொலுத்தீன் கவரில் போட்டு முகத்தில் தடவி வர தழும்புகள் படிப்படியாக மறையும்.  

பற்களை சுத்தமாக்கும் சில உணவுகள்!




பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மடும்தான் பற்கள் வெள்ளையாகுமா?
இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. அவற்றுள் இன்னொரு வழியும் உண்டு அவை சில உணவுகளின் மூலம் பற்களை சுத்தமாக்குவது. அது என்னென்ன உணவுகள் என்று பார்போம்...


Ø ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு பற்பசை, இதில் சிட்ரஸ் அசிட் இருக்கிறது. இதனால் இதை உண்பதால் பற்களானது சுத்தமாவதோடு, வெள்ளையாகவும் மாறும். வேண்டுமென்றால் தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால், பற்களானது சுத்தமாகும். அல்லது ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அத்துடன் பேக்கின் சோடாவை சேர்த்து, பின் துலகினாலும் பற்கள் பளிச்சிடும்.






Ø ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆன்ஸிடன்ட் பக்டீரியாவை அழித்து, வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, பற்களையும் வெள்ளையாகுகிறது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

Ø எலுமிச்சை:  எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், இது பற்களுக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால், பற்களானது சுத்தமாகவும், பாக்டீரியாவை அழித்து, ஈறுகளை வலுவாக்கும். வேண்டுமென்றால் எலுமிச்சையுடன் சிறிது உப்பை தொட்டு தினமும் பல் துலக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் துலக்கி வந்தால், பற்கள் வலுவடைத்து, வெள்ளையாகும்.




Ø சீஸ்: சீஸ் கூட ஒரு வகையான பற்பசைதான். எப்போது சீஸை உண்டாலும் வாயில் எச்சிலானது ஊறும். சொல்லப்போனால், உண்மையில் சீஸ் ஆனது எச்சிலை அதிகமாக சுரக்கும். அப்படி எச்சில் சுரந்தால் பற்களானது சுத்தமாவதுடன், வாயில் துர்நாற்றத்தைக் குறைத்து, கிருமிகளையும் அழிக்கும். ஆகவே இத்தகைய உணவுகளை உண்டு, பற்களை வெள்ளையாகவும், வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளுங்கள்.