v வெயில் காலங்களில் ஊர் சுற்றுவது என்பது சற்று
கடினமான ஒன்றுதான். இக்காலங்களில் பெண்கள் மிகவும் கவலைப்படுவது முக அழகு கெட்டுவிடும்
என்பதை நினைத்துத்தான். உங்களுக்கு எணைப்பசை சருமமாக இருந்தால், வெயில் உங்கள்
எணைப்பசையை மேலும் அதிகரிக்கச்செய்து உங்கள் முக அழகைக்கெடுத்துவிடும்.
v எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு
வந்ததும் சிறிது தயிர், கடலைமா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி
சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.
v வெள்ளரிக்காயை தினமும் காலையில் முகத்தில்
தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன்
பால், பவுடர் கலந்து தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாகக் காணப்படும்,
இதை தொடர்ந்து ஒரு மாதகாலமாவது பின்பற்றவேண்டும்.
v தக்காளிப்பழத்தை நன்கு பிழிந்து சாறாக எடுத்து
முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன்
வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
v பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன் கேரட்
துருவலை கலந்து முகத்தில் தடவினால் அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
v எண்ணைப்பசை சருமத்தினர் அடிக்கடி குளிர்ந்த
தண்ணீரால் முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதிலாக கடலைமாவை
பயன்படுத்தலாம். இதானால் எண்ணெய் வழிவது குறைவதோடு முகமும்
பளபளப்பாகவும்இருக்கும்.
v எண்ணைப்பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில்
தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும்.
v வெள்ளரிக்காய் சாறு எலுமிச்சம் பழச்சாறு, சந்தன
தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைகிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து
அவற்றைமுகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து
செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.
v சோளத்தை நன்கு பவுடர் செய்து தயிர் மற்றும் எலுமிச்சை
சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை
நீங்கும்.
v எண்ணெய் பசை சருமத்தினர் வெயிலில் சென்று விட்டு வீட்டிற்கு
வந்ததும் சிறிது தயிர், கடலைமா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி
சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.
v எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு,
திராட்சைசாறு, ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கொண்டு அவற்றை நன்றாகக் கலக்கி
முகத்தில் பூசவேண்டும்.
v பப்பாளி கூழ், முல்தானிமட்டி, வேப்பிலை பொடி
ஆகியவற்றை நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து
வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment