Wednesday, October 17, 2012

மேக்கப் டிப்ஸ்...



Ø மேக்கப் போடும்போது பவுன்டேஷனை லேசாகப் பயன்படுத்துவது நல்லது. அதிகபடியான பவுன்டேஷன் முகத்தின் கோடுகளை வெளிப்படுத்திக் காட்டும். மேலும் முகத்தின் சுருக்கங்கள் இதன் அதிகபடியான உபயோகத்தின் பின் விளைவாகும்.


Ø இலேசான அல்லது எண்ணெய்ப் பசையை குறைக்கக்கூடிய பவுன்டேஷன் அல்லது ஈரப்பதமான பவுன்டேஷன்  சருமத்தை மிருதுவாக்கும்.

 
Ø பவுடர் பூசும்போது மேலிருந்து கீழ் நோக்கி தடவவும். கீழிருந்து மேலே பூசினால் கண்களுக்குச் சரியாகத் தெரியாத முடிகள் எழுந்து நின்று முகத்தை அசிங்கமாகக் காட்டும்.


Ø ஐ ஷேடோவை அடிப்படையாகக் பயன்படுத்துவதால் கண்களுக்கு அதிகப்படியான ஒளி கிடைக்கிறது. பளபளக்கும் வெளிர் நிறங்களைப் பயன்படுத்திப்பாருங்கள். இவை கண் இமைகளுக்குப் பளபளப்பைக் கொடுக்கும். உங்கள் கண்களில் ஒளியையும் அதிகரிக்கும்.


Ø முகத்தில் என்னதான் மேக்கப் போட்டிருந்தாலும் அழகான புன்னகைதான் மேலும் உங்களை அழகாக்கும். அதை நினைவில் கொள்ளுங்கள்.



இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா?



பெண்களுக்கு முகத்தை அழகாக காட்டுவதில் கண்களுக்கும் பங்குண்டு. அக்காலத்தில் அழகான பெண்கள் என்றால் கண்கள் பெரிதாகவும், இமைகள் சற்று நீளமாகவும் இருந்தால் அவர்களே அழகானவர்கள். மேலும் அந்த கண் இமைகள் கண்களை தூசிகளிலிருந்து பாதுகாக்கிறது. அப்படிப்பட்ட அந்த கண் இமைகள் சிலருக்கு அடர்த்தி இல்லாமல் இருக்கும். இதற்காக அவர்கள் கடைகளில் விற்கும் செயற்கையான கண் இமைகளை வாங்கி பொருத்திகொள்கின்றனர். அப்படி செய்வதற்கு நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் கண் இமைகளை அழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்கலாம்.


  கண் இமைகள் வளர சில டிப்ஸ்...

Ø ஆமணக்கெண்ணை ஒரு மருத்துவகுணம் வாய்ந்த பொருள். தினமும் ஆமணக்கெண்ணையை உறங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணையை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவிவர, கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.

Ø     தினமும் கண் இமைகளை தலை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை விட்டமின் எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் விட்டமின் மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய்வைத்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதானால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் எதனை தினமும் செய்தல் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.

Ø   தினமும் இமைகளை சுத்தமான சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சீப்பானது சிறிதாகவும் இருக்கலாம் அல்லது மஸ்காரா பிரஸ் வைத்து சீவலாம்.அதிலும் ஏதேனும் ஒரு இயற்கை எண்ணெயில் நனைத்து சீவினால் நல்லது. கண் இமைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சீவ வேண்டும்.                                           

  Ø  ஆமணக்கெண்ணை/விட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையை தரும். இரவில்படுக்கும் முன் கண் இமைகள் மீது வஸ்லினை தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவிவிட வேண்டும்.

Ø  நல்ல ஆரோக்கியமான புரோடீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப்பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோடீன் உணவை உண்ணவேண்டும். மீன், பருப்புவகைகள், நட்ஸ் மற்றும்  புரோடீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்கவேண்டும். இப்படி எல்லாம் செய்தால் கண் இமை முடியானது அழகாக, அடர்த்தியாக, நீளமாக வளரும். ஆனால் இதற்கு நிறைய பொறுமை வேண்டும். மேலும் இவற்றைஎல்லாம் தினமும் செய்யவேண்டும், இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்







Sunday, October 14, 2012

அழகுக் குறிப்புகள் காணொளியில்



கீழே சில அழகு குறிப்புகளுக்கான காணொளிகள் தரப்பட்டுள்ளன...
    முக அலங்காரம்


                     


                                     கண் இமைகளை அழகுபடுத்தல்


                     


                                                    சிகை அலங்காரம்

                     

ஹேயா  கட் (ஸ்ரெப்  கட்) 






Saturday, October 13, 2012

கருவளையம் மறைய..

   
வளையம் நீங்கும். வெள்ளரிச்சாற்றிற்கு பதிலாக வெள்ளரிகையை நறுக்கி கண்களின்மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

Ø பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களைச்சுற்றித் தடவி வர கருவளையம் மறையும்.

Ø தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதைத்தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

Ø வெள்ளரிச்சாற்றுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நாளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Ø பால் பவுடரை தண்ணீரில் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களைச் சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய்சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும்வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

Ø ஜாதிக்கையை அரைத்து கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்துவிடும்.

Ø போதியளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.


அழகிற்கு அழகு சேர்க்கும் மருதாணி...



பெண்களின் அழகை ஜோலிக்கவைப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்குண்டு. அதனாலோ என்னவோ மருதாணி (மெகந்தி) வைத்துக் கொள்ள எல்லா பெண்களும் ஆசைப்படுகின்றனர். மருதாணி இலைகளை அரைத்து பூசுவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைவதுடன் புத்துணர்ச்சியும் ஏற்படும்.

இது தவிர மருதாணி சிறந்த மருத்துவக்குணம் கொண்டதாகும். கை, கால்களில் இதனை பூசிக் கொள்வதின் மூலம் உடல் வெப்பம் தணிகிறது. அத்தோடு கை, கால்கள் புத்துணர்வுடன் காணப்படுவதை நாமே உணரக்கூடியதாக இருக்கும்.

மருதாணி போடும்போது பொறுமை மிக அவசியமானது. கை தவறினால் அழகு கெட்டு விடும். கைகளுக்கு மருதாணி இட்டு குறைந்தது மூன்று மணித்தியாலங்களாவது மருதாணிக்கலவை கைகளில்  இருக்க வேண்டும் என்கின்றனர் அழகுக்கலை நிபுணர்கள். கையில் மருதாணி அலங்காரங்களை போட விரும்புவோர் மருதாணி இலைகள் கிடைக்காவிட்டால் கடைகளில் தரமான மருதாணிப்பவுடரை வாங்கி கலவை செய்து பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு அலங்காரங்கள் வரும்.

 மேலும் மருதாணி போடும் முன்னர் கை, கால்களுக்கு எதாவது ஒரு கிறீம் அல்லது எண்ணையை கொண்டு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதன்மூலம் எமது கை, கால்கள் புது அழகு பெறுவதுடன் மருதாணி போட்டுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.