வளையம் நீங்கும். வெள்ளரிச்சாற்றிற்கு பதிலாக வெள்ளரிகையை நறுக்கி
கண்களின்மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.
Ø பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை
கண்களைச்சுற்றித் தடவி வர கருவளையம் மறையும்.
Ø தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதைத்தூள்
ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து
கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.
Ø வெள்ளரிச்சாற்றுடன் பன்னீர் கலந்தும் தடவலாம்.
ஒரு நாளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
Ø பால் பவுடரை தண்ணீரில் அல்லது பன்னீரில்
கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களைச் சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன்
வெள்ளரிக்காய்சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும்வரை வைத்திருக்காமல், சிறிது
ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.
Ø ஜாதிக்கையை அரைத்து கண்களைச் சுற்றி
தடவிக்கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இதை தொடர்ந்து செய்து வர
கருவளையம் மறைந்துவிடும்.
Ø போதியளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே
கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 8 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.
.jpg)
No comments:
Post a Comment