![]() |
பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக
இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால்
வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும்
துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மடும்தான்
பற்கள் வெள்ளையாகுமா?
இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது.
அவற்றுள் இன்னொரு வழியும் உண்டு அவை சில உணவுகளின் மூலம் பற்களை சுத்தமாக்குவது.
அது என்னென்ன உணவுகள் என்று பார்போம்...
Ø ஸ்ட்ராபெர்ரி: இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு
பற்பசை, இதில் சிட்ரஸ் அசிட் இருக்கிறது. இதனால் இதை உண்பதால் பற்களானது சுத்தமாவதோடு,
வெள்ளையாகவும் மாறும். வேண்டுமென்றால் தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில்
தேய்த்தால், பற்களானது சுத்தமாகும். அல்லது ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அத்துடன்
பேக்கின் சோடாவை சேர்த்து, பின் துலகினாலும் பற்கள் பளிச்சிடும்.
![]() |
Ø ஆப்பிள்: ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆன்ஸிடன்ட் பக்டீரியாவை அழித்து, வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, பற்களையும் வெள்ளையாகுகிறது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.
Ø எலுமிச்சை: எலுமிச்சையில்
சிட்ரிக் ஆசிட் இருப்பதால், இது பற்களுக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு துண்டு
எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால், பற்களானது சுத்தமாகவும்,
பாக்டீரியாவை அழித்து, ஈறுகளை வலுவாக்கும். வேண்டுமென்றால் எலுமிச்சையுடன் சிறிது
உப்பை தொட்டு தினமும் பல் துலக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் துலக்கி வந்தால், பற்கள்
வலுவடைத்து, வெள்ளையாகும்.
Ø சீஸ்: சீஸ் கூட ஒரு வகையான பற்பசைதான். எப்போது
சீஸை உண்டாலும் வாயில் எச்சிலானது ஊறும். சொல்லப்போனால், உண்மையில் சீஸ் ஆனது
எச்சிலை அதிகமாக சுரக்கும். அப்படி எச்சில் சுரந்தால் பற்களானது சுத்தமாவதுடன்,
வாயில் துர்நாற்றத்தைக் குறைத்து, கிருமிகளையும் அழிக்கும். ஆகவே இத்தகைய உணவுகளை
உண்டு, பற்களை வெள்ளையாகவும், வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளுங்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment